இறப்பர் பாலை சேகரிப்பது எவ்வாறு?
இம்மரத்தில் வெளிப்படையிலிருந்து மெல்லிய கீழங்கள் மூலைவிட்டமாக ஒரு கூரிய கத்தியினால் வெட்டி எடுக்கப்படும்.
இம்மரத்தின் கசியும் பாலைச் சேகரிப்பதற்கு சிரட்டைக்கு பதிலாக மெருகூட்டப்பட்ட மட்பாண்டத்திலான கோப்பைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஒரு மரத்திலிருந்து 30ml பால் எடுக்கப்படும்.
பாற்கலங்கள் மென்மர உயிரியல் காணப்படும். பால் எடுப்பதற்காக ஆரம்ப வெட்டுக்கு கீழாக
உள்ள மெல்லிய உரிய மேற்பட்டைப் பகுதிகள் ஒன்றுவிட்ட ஒரு நாள் வெட்டி அகற்றப்படும். வெட்டு நிலமட்டத்தை ஓரளவு அடைந்த பின் மேற்பட்டை
புதிதாக உருவாக விடப்படும்.
இறப்பர் பாலின் கூறுகள்
நீர் 52-60%
இறப்பர் 30-41%
புரதங்கள் 2.0-7.7% ரெசின் 0.0-3.4%
வெல்லம் 1.5-4.2%
இறப்பர் பாலில் புரதம், வெல்லம் போன்ற பதார்த்தங்கள்
அடங்கியுள்ளன. இவை
பற்றீரியாக்கள் சிலவற்றைப் பிரிகையடையச் செய்து காபோனிக் அமிலத்தை தோற்றுவிக்கின்றன.
இறப்பர் உற்பத்திக்கு தற்போது
பயன்படுத்தப்படும் சில திரள் வகைகள்:
சோடியம்
சல்பேற்று
அமோனியம் கரைசல்
போமலின்
சோடியம் காபனேற்று போன்ற கலவைகளாகும்.
இறப்பர் பாலின் உலர்இறப்பர் அளவைத்
துணிதல்:
இறப்பர்
பாலிலுள்ள உலர் இறப்பரின் அளவைத் துணிவதற்கு {DRS-Dry Rubber Content} மெற்றோலக்
{Metrolac} என அழைக்கப்படும்.
இதற்கு நீரமானி பயன்படுத்தப்படும். (உ+ம்-வரிகொண்ட புகையூட்டப்பட்ட இறப்பர், கிரேப்
இறப்பர், குற்றி இறப்பர்.
இயற்கை இறப்பர் ஜசோபிரின் என்னும் ஜதரோகாபனின் பல்பகுதிகளாகும்.
N CH2 =C-CH=CH2 ஜசோபிரின்
பல்பகுதியம்.
இறப்பர்
உற்பத்தியில் வல்கனைசுப்படுத்தப்பட்ட இறப்பர்.
இறப்பர் பொறிமுறை இயல்பை அதிகரிக்கச் செய்வதற்காகவும்
இயற்கை இறப்பரின் மீள் சக்தியைக் கூட்டுவதற்கும் இறப்பர் வல்கனைசுப்படுத்தப்படுகிறது
.வல்கனைசுப்படுத்தப்படும் போது இறப்பருக்கு
கந்தகம் சேர்ந்து நன்கு கலக்கப்பட்டு உயர் வெப்பநிலைக்கு வெப்பமூட்டப்படும்.
1952
இல் சீனாவுடன் செய்து கொண்ட அரிசி, இறப்பர், இருபக்க வர்த்தக உடன்படிக்கை மூலம் இலங்கையின்
இறப்பருக்கான நிலையான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
1977
இல் இயற்கை இறப்பருக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் இலங்கை நன்மையடைந்தது.
No comments:
Post a Comment